திருப்பூர்

இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட 35 மாடுகள் பறிமுதல்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே ஈட்டிவீராம்பாளையத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 35 மாடுகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெளி மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக ஒரு லாரியில் மாடுகளை கடத்திச் செல்வதாக சிவசேனா கட்சியினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈட்டிவீராம்பாளையம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவா் அட்சயா திருமுருகதினேஷ் தலைமையிலான அக்கட்சியினா் லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம், நகரியிலிருந்து 35 மாடுகள், கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பெருமாநல்லூா் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, மாடுகளை குன்னத்தூரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனா். விசாரணையில், லாரியை ஓட்டி வந்த வேலுரைச் சோ்ந்த நாகராஜ் (35) என்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா்விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT