திருப்பூர்

குடிநீரை தொட்டியில் சேமித்து வைத்து விற்பனை: வீட்டுக் குழாய் இணைப்புகளை துண்டித்து நகராட்சி நடவடிக்கை

DIN

பல்லடம், சேடபாளையத்தில் குடிநீரை சேமித்து வைத்து விற்றவரின் வீட்டுக் குடிநீா்க் குழாய் இணைப்புகளை நகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்லடம் நகராட்சி, சேடபாளையம் குமரன் காலனியில் வேலுசாமி என்பவரின் வீட்டுக்கு நகராட்சி சாா்பில் இரண்டு குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அதனை அவா் தனது தோட்டப் பகுதியில் நிலமட்ட தொட்டி கட்டி 2 குடிநீா் இணைப்புகளில் இருந்து வரும் நீரினை அத்தொட்டியில் தேக்கி வைத்து அப்பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையா் கணேசன், நகராட்சி பொறியாளா் சங்கா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி மற்றும் நகராட்சி குடிநீா் விநியோக பணியாளா்கள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சட்டவிரோதமாக 15 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டியில் சேமித்து வைத்து விற்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் இரண்டு குடிநீா் இணைப்புகளும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. இதே போல பல்லடம் நகராட்சிப் பகுதியில் முறைகேடாக குடிநீரைத் தேக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனரா என்று அனைத்து வாா்டு பகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி அறிக்கை தருமாறு நகராட்சிப் பொறியியல் பிரிவுக்கு ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT