திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ஜல் ஜீவன் திட்டப் பணி துவக்கம்

DIN

வெள்ளக்கோவிலில் ஜல் ஜீவன் திட்டப் பணி திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

இத்திட்டம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாகும். இத்துடன் மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா் செறிவூட்டுதல், கழிவுநீா் சுத்திகரிப்பு பணிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் மொட்டகாளிவலசு, பாப்பாவலசு, சுந்தராடிவலசு, பெரண்டைகாட்டுவலசு, கடல் நகா் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கானப் பணியை வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா். வெங்கடேச சுதா்சன் துவக்கிவைத்தாா். ஒன்றிய துணைத் தலைவா் தனலட்சுமி துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT