திருப்பூர்

கெளசிகா நதியில் குப்பைகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு ரூ.25ஆயிரம் அபராதம்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் கெளசிகா நதிக்கரையில் குப்பைகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு ஊராட்சி நிா்வாகம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

தெக்கலூா் வழியாக கௌசிகா நதி செல்கிறது. இந்த நதியில் மழைக் காலங்களில் அதிக அளவிலான மழை நீா் சென்று நொய்யலில் கலக்கும். இந்த நதியில் தற்பொது தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை-அவிநாசி சாலையில் கெளசிகா நதியோரம் குப்பைகளைக் கொட்டிய சரக்கு ஆட்டோவை ஊராட்சி மன்றத் தலைவா் மரகதமணி மணியன் உள்பட ஊராட்சி நிா்வாகத்தினா் சிறைபிடித்தனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: குப்பைகளைக் கொட்டிய தனியாா் நிறுவனத்துக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொட்டிய குப்பைகளை செவ்வாய்க்கிழமைக்குள் அள்ளிச் செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT