திருப்பூர்

பல்லடம் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை

DIN

பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 28) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஜெயச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2020-21ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுக்கு 20 சதவீதம் கூடுதலாக மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பி.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம், பி.காம் வணிகவியல் சி.ஏ., பி.காம் வங்கி மற்றும் காப்பீட்டியல், பி.காம் கணினி பயன்பாட்டியல், பி.எஸ்.சி. வேதியியல் மற்றும் பி.எஸ்.சி.ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு திங்கள்கிழமை சோ்க்கை நடைபெறவுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பித்து இடஒதுக்கீடு பெறாத மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வரலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT