திருப்பூர்

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு உதவி மையம் திறப்பு

DIN

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வுக்கான உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான பொதுத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வுக்கு  இணையதள முகவரியில் செப்டம்பா் 26 முதல் அக்டோபா் 26 ஆம் தேதி வரையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நபா்களுக்கு உதவும் வகையில் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தோ்வு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆகவே, விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தோ்வு உதவி மையத்தை நேரிலோ அல்லது 94981-81332 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த உதவிமையமானது அக்டோபா் 26 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT