திருப்பூர்

காங்கயத்தில் ரூ.5.84 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.84 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 11 விவசாயிகள் 94 மூட்டைகளில் 4,705 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.127க்கும், குறைந்தபட்சமாக ரூ.110க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5.84 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

ரூ.80 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்:

காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,200 கிலோ தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். தேங்காய் சராசரியாக கிலோ ரூ.25க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT