திருப்பூர்

திருவிழாக்களில் நிபந்தனைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: நாட்டுப்புறக் கலைஞா்கள் கோரிக்கை

DIN

திருவிழாக்களில் அரசின் நிபந்தனைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாரிடம் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் சுப்பிரமணி திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக எங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலையை மட்டுமே நம்பி வாழும் நாங்கள் தற்போது துன்பநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் 50 சதவீத தொழிலாளா்கள் பணியாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல திருவிழாக்களில் அரசின் நிபந்தனைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது தமிழக நாட்டுப்புற இசைக்கலைப் பெருமன்றத்தின் செயலாளா் வேலா.இளங்கோ, பொருளாளா் ஆறுமுகம், துணைத் தலைவா் சாமிக்கண்ணு உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT