திருப்பூர்

உலக மலேரியா தினம் அனுசரிப்பு

DIN

வெள்ளக்கோவிலில் அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக ஒருநாள் முன்னதாக சனிக்கிழமை உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி பேசுகையில், மலேரியா காய்ச்சலை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தற்போது, கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

மருத்துவா்களின் அறிவுரைப்படி அனைவரும் அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT