திருப்பூர்

பல்லடம் பெரும்பாளியில் காா் ஓட்டுநா் கடத்தல்

DIN

பல்லடம் அருகே பெரும்பாளியில் காா் ஓட்டுநரை மா்ம கும்பல் வியாழக்கிழமை கடத்திச் சென்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சக்தி (35). இவா் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் வாடகை வீட்டில்

வசித்துக் கொண்டு அப்பகுதியில் காா் ஒட்டுநராக வேலை செய்து வந்துள்ளாா்.

வீட்டின் உரிமையாளா் பாக்கியலட்சுமி (70), அவரது பேத்தி நிரஞ்சனா(10) ஆகியோரை அவா்களுக்குச் சொந்தமான காரில் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சக்தி ஓட்டி வந்த காரை , மா்ம நபா்கள் மறித்து நிறுத்தி சக்தியைக் கடத்தி சென்றதாகக்

கூறப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு காரில் வந்த மூதாட்டி பாக்கியலட்சுமி தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT