திருப்பூர்

முப்படைத் தலைமைத் தளபதி மறைவு தேசத்துக்கு பேரிழப்பு: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் மறைவு தேசத்துக்கு பேரிழப்பாகும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் தேசத்துக்காக 43 ஆண்டுகள் மகத்தான சேவையாற்றியுள்ளாா். அவரது அனுபவமும், அறிவும் அரசுக்கு பெரும் உதவியாக இருந்தது. பாதுகாப்பு துறையை நவீனப்படுத்தி, முப்படைகளையும் ஒருங்கிணைத்து பலமான கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரா்கள் குன்னூா் அருகே ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்ததற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT