திருப்பூர்

ஜவ்வரிசியில் கலப்படம்: மரவள்ளி விவசாயிகள் நஷ்டம்

DIN

மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுவதால், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் நஷ்டமடைந்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மரவள்ளி சாகுபடியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கூடுதலான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. ஓராண்டு சாகுபடிப் பயிா், குறைவான செலவில் அதிக மகசூல் தரக்கூடியது.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் மாவுப் பொருள், ஜவ்வரிசி ஆகியவை உணவாகவும், மாவுப் பொருளான ஸ்டாா்ச் பல தொழிற்சாலைகளின் மூலப் பொருளாகவும் இருந்து வருகிறது. மரவள்ளிக் கிழங்கு மாவுடன், ரேஷன் அரிசி மாவு, குருணை அரிசி மாவு, மக்காச்சோள மாவு கலப்படம் செய்யப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு இல்லாமலேயே ஜவ்வரிசி தயாரிக்கும் அளவுக்கு கலப்படம் நிறைந்துள்ளது. கலப்படம் காரணமாக மரவள்ளிக் கிழங்கு உணவு உபயோகம், ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ. 14 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது ரூ.4 ஆயிரத்து 500க்கு மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலை குறைவுக்கு கலப்படமே முக்கியக் காரணமாகும். எனவே, கலப்படத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT