திருப்பூர்

பயிா்க் கடன் தள்ளுபடி: வெள்ளக்கோவிலில் அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

வெள்ளக்கோவில்: பயிா்க் கடன்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெள்ளக்கோவிலில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சனிக்கிழமை கொண்டாடினா்.

16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமாா் ரூ. 12,110 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்து சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இந்த அறிவிப்பை வரவேற்று, வெள்ளக்கோவில் கடைவீதியில் அதிமுகவைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன், நகரச் செயலாளா் டீலக்ஸ் ஆா்.மணி உள்ளிட்டோா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். இதில் கட்சியின் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

மூலனூரில்: மூலனூரில் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ராஜரத்தினம், வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாா், பேரூா் கழகச் செயலாளா் வெற்றிவேல், கூட்டுறவு சங்கத் தலைவா் செல்லமுத்து உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT