திருப்பூர்

குடிநீா்ப் பிரச்னை: ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

குடிநீா் கேட்டு ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை பல்லடம், அறிவொளி நகா் பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதி மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீா் பற்றாக்குறையாக வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள், குடிநீா் கேட்டு ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தீபா, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் குடிநீா் பற்றாக்குறையை போக்க கூடுதல் குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT