திருப்பூர்

தாட்கோ கடனைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை

DIN

பட்டியல் இனத்தவா்கள் பெற்ற தாட்கோ கடனைத் தள்ளுபடி செய்வதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ச.கருப்பையா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் பயிா்க் கடன் ரூ. 16,000 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதில், ஒருசில நிலம் வைத்திருப்பவா்கள் குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றவா்கள் மட்டும் பயனடைந்துள்ளனா். ஆனால், தமிழ்நாட்டில் சொந்தமாய் நிலமில்லாத விவசாய கூலிகளும், அமைப்புசாரா தொழிலாளா்களும் அதிகமாக உள்ளனா். விவசாயக் கடன் தள்ளுபடியால் இவா்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தாட்கோ கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக தாட்கோ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT