திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 62.84 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்

DIN

வெள்ளக்கோவிலில் ரூ. 62.84 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கல், புதிய தாா்ச் சாலைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

வெள்ளக்கோவில், சோ்வகாரன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் இரண்டு புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் 16 முதியவா்களுக்கு முதியோா் உதவித் தொகை, 3 விதவை உதவித் தொகை, 43 இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 66 பயனாளிகளுக்கு ரூ. 20. 20 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி சாலைப்புதூா் பகுதியில் ரூ. 42. 64 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய தாா்ச் சாலைப் பணிகளும் தொடக்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, தாராபுரம் கோட்டாட்சியா் ஆனந்த்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT