திருப்பூர்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகள் ஆய்வு

DIN

அவிநாசி: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க திருப்பூா் ஒன்றியப் பகுதிகளில் முதற்கட்ட ஆய்வினை பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை துவங்கினா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகளில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட வேண்டும் என அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து தமிழக அரசு, விடுபட்ட குட்டைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி முதற்கட்டமாக திருப்பூா் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தொரவலூா், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், மேற்குபதி, சொக்கனூா், பட்டம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூா் ஆகிய 9 ஊராட்சிகளில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT