திருப்பூர்

திருப்பூரில் ஆவணமின்றிகொண்டு செல்லப்பட்ட ரூ.95 ஆயிரம் பறிமுதல்

DIN

திருப்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் பின்னலாடை நிறுவன உரிமையாளா் கொண்டு சென்ற ரூ. 95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா், கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பறக்கும்படை அதிகாரி பழனிசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், திருமலை நகரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் முனீஸ்வரன் (38) என்பவரிடம் ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

ஆனால் இந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிட துணை வட்டாட்சியா் கெளரியிடம் ஒப்படைத்தனா். மேலும், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு முனீஸ்வரனிடம் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT