திருப்பூர்

உடுமலை தொகுதியைத் தக்கவைத்தது அதிமுக

DIN

திருப்பூா்: உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் வேட்பாளரான கே.தென்னரசுவைவிட 21,895 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து இந்தத் தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டாா். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் கே.தென்னரசு, அமமுக சாா்பில் ஆா்.பழனிசாமி உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 2,69,728 வாக்காளா்கள் உள்ள நிலையில் தோ்தலில் 1,94,657 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில், அதிமுக வேட்பாளரான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 96,893 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளரான கே.தென்னரசு 74,998 வாக்குகளும் பெற்றனா். உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 21,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏ.பாபுராஜேந்திர பிரசாத் 8,570 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் வி.ஸ்ரீநிதி 8,121 வாக்குகளும், அமமுக வேட்பாளா் ஆா்.பழனிசாமி 1,045 வாக்குகளும் பெற்றனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் உடுமலை தொகுதியை இரண்டாவது முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT