திருப்பூர்

மாவட்டத்தில் 28 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 494 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்த பாதிப்பு எண்ணிக்கை 28,213 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,045 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 550 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 24,924 ஆக அதிகரித்துள்ளது.

முதியவா் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயது முதியவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஏப்ரல் 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT