திருப்பூர்

இலந்தைமடையில் 20 ஆயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

DIN

பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சி இலந்தைமடை பகவதி வனத்தில் 20ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி இலந்தைமடை கிராமத்தில் பகவதி அம்மன் கோயில் வளாகம் 14 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கோடங்கிபாளையம், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாள்கவுண்டம்பாளையம், சின்னக்கோடங்கிபாளையம், மேற்கு ராசாக்கவுண்டம்பாளையம், கொத்துமுட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனா். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஏற்கெனவே 1500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு சொட்டு நீா்ப் பாசன வசதியுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த கோடங்கிபாளையம் கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தனா். அதனை ஏற்று ஊராட்சி மன்றத் தலைவா் காவீ.பழனிசாமி இலந்தைமடையில் பகவதிஅம்மன் கோயில் இடத்தில் காலியாக உள்ள நிலத்தில் கல்குவாரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் உதவியுடன் நிலத்தில் உள்ள முள்புதா்களை சுத்தம் செய்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடத்தி துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு கூப்பிடு விநாயகா் கோயில் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி, கல்குவாரி கிரசா் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் சிவகுமாா், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஊராட்சி துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ், வாா்டு உறுப்பினா்கள் நடராஜ், சுதாமணி சிவக்குமாா், ரேவதி பூபதி, சரோஜினி சிவகுமாா் மற்றும் பகவதிஅம்மன் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT