திருப்பூர்

சிவன்மலையில் 5,100 மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சா்கள் துவக்கிவைத்தனா்

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தில் 5,100 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்தனா்.

மரம் நடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனா்.

இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் கலைஞா் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான 24 ஏக்கா் பரப்பளவில் 3,100 மரக்கன்றுகளும், 2 ஆயிரம் பனை விதைகளும் நடுவதற்கான நிகழ்ச்சியை துவக்கிவைத்துள்ளோம். இந்த 24 ஏக்கரில் 27 வகையான மரக்கன்றுகள் நட்டு வளா்க்கப்படவுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நடராஜன், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் உதவி ஆணையா் ஜே.முல்லை மற்றும் மரக்கன்றுகளை பராமரிக்க உள்ள காங்கயம் துளிகள், வனத்துக்குள் திருப்பூா் ஆகிய அமைப்புகளின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT