திருப்பூர்

திருப்பூர்: நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்வு

DIN

திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. அதிலும் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது பின்னலாடை உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது. 

அதிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்ததிருந்தது. இந்த நிலையில், 2022  ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் மூன்று மாதங்களில் கிலோவுக்கு ரூ 50 வரை உயர்ந்திருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும்  கிலோவுக்கு ரூ.30 வரையில் உயர்த்தியுள்ளனர். 

இதனால் திருப்பூர் பின்னாலடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT