திருப்பூர்

கண்ணபுரம் கால்நடைச் சந்தையில் ரேக்ளா வண்டி ஓட்டிய அமைச்சா்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த கண்ணபுரம் வருடாந்திர மாட்டுச் சந்தையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில் பயணம் செய்தாா்.

கண்ணபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற காங்கயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. இந்த சந்தைக்கு சுமாா் 25 ஆயிரம் காங்கயம் இன காளைகள், எருதுகள், கறவை மாடுகள், கன்றுக் குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சந்தையைப் பாா்வையிட செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது அவா் அங்கிருந்த ரேக்ளா வண்டியை ஓட்டிப் பாா்த்தாா். பின்னா் சந்தை மற்றும் கோயிலில் விவசாயிகள், வியாபாரிகள், கடைக்காரா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் குறைவின்றிச் செய்து தர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT