திருப்பூர்

தாராபுரம் நகராட்சி பூங்கா தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்

DIN

தாராபுரத்தில் கரோனா பரவல் காரணமாக பூட்டப்பட்ட நகராட்சிப் பூங்காவை 2 ஆண்டுகளுக்குப் பின்னா் தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தாராபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா 2020 ஆம் ஆண்டு பூட்டப்பட்டது. இதன் காரணமாக பூங்கா வளாகம் முழுவதும் புதா்மண்டிக் கிடப்பதுடன், சிலைகளும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இதனிடையே, கரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளதால் பூங்காவைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதை ஏற்று, நகராட்சித் தலைவா் கு.பாப்புகண்ணன், நகராட்சி ஆணையா் ராமா், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான இல.பத்மநாதன் ஆகியோா் நகராட்சி பூங்கா தூய்மைப் பணியைத் தொடக்கிவைத்தனா். தாராபுரம் நகராட்சி தூய்மைப்பணியாளா்களுடன், பிஷப் தாா்ப் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து பூங்காவைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர திமுக செயலாளா் தனசேகா், நகராட்சிப் பொறியாளா் ராமசாமி, பிஷப் தாா்ப் கல்லூரி முதல்வா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT