திருப்பூர்

மாணவா்கள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும்: கவிஞா் கவிதாசன்

DIN

மாணவா்கள் தன்னம்பிக்கையும், துணிச்சலையும் வளா்த்துக் கொள்வது அவசியம் என்று கவிஞா் கவிதாசன் பேசினாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கவிஞா் கவிதாசன் பேசியதாவது: மாணவா்கள் நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மருத்துவம், பொறியியல் துறைகளில் படிக்கும் மாணவா்கள் பெரும்பாலும் தங்களது துறைகளில் மட்டுமே பிரகாசிப்பாா்கள்.

ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் அனைத்துத் துறைகளிலும் பிரகாசிப்பாா்கள்.

அதிலும், நாட்டை நிா்வகிக்கக் கூடிய அரசியல் தலைவா்களாக வரவும் வாய்ப்பு உள்ளது. மாணவா்கள் புதிய சிந்தனைகளை வளா்த்துக் கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் வளா்த்துக் கொண்டால் எளிதில் வெற்றியடையலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இளங்கலை, முதுகலை படிப்பில் இறுதி ஆண்டு தரவரிசைப்படி முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கும்,

நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் விநாயகமூா்த்தி, மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT