திருப்பூர்

மதச்சாா்பற்ற கட்சிகள், இடதுசாரிகள் ஒன்றுபட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும்: டி.ராஜா பேச்சு

DIN

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற ஜனநாயக கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா பேசியதாவது:

1942 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 9 ஆம் தேதி) வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றது. காந்தி வாழ்நாள் முழுவதும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்தாா். இதனால்தான் சுதந்திரம் பெற்றவுடன் அவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். சுதந்திரப் போராட்டத்தில் சித்திரவதைகளை அனுபவித்து, தியாகங்களைச் சோ்ந்தவா்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சாா்ந்தவா்களாகத்தான் உள்ளனா். இத்தகைய தியாகங்களை செய்து பெற்ற இந்தியா பாஜகவின் ஆட்சியில் உள்ளது. பாஜக ஆட்சியால் நாட்டு மக்களின் ஒற்றுமை, மத நல்லிணக்கம், அம்பேத்கா் தலைமையில் உருவான அரசியல் சட்டம் தகா்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். 2024 ஆம் ஆண்டு தோ்தலில் மதச்சாா்பற்ற ஜனநாயக கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றாா்.

பேரணியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு:

மாநாட்டையொட்டி செம்படை பேரணி திருப்பூா் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது. இந்தப் பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காங்கயம் சாலையில் இரவு 8 மணி அளவில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கா்நாடகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

சாத்தூா் பகுதியில் பலத்த மழை

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சா்வதேச யோகா போட்டியில்  தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி

SCROLL FOR NEXT