திருப்பூர்

பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

DIN

அவிநாசி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

அவிநாசி கிழக்கு வீதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு கடையில் பிளாஸ்டிக் பைகள், டம்ளா், தட்டு, மேஜை விரிப்புகள் உள்ளிட்ட

பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மற்றொரு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடை உரிமையாளருக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்ததால் கடைக்கு ‘சீல்’ வைத்ததுடன், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT