திருப்பூர்

அவிநாசியில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட சத்துணவு அமைப்பாளர் ஜோதி. இவரது  குடும்ப புகைப்படத்தை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து களவாடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட  இரண்டு நபர்கள் மீதும், அலுவலக கோப்புகளை தனிநபர்களுக்கு மறைமுகமாக வழங்கி ஆதரவு கொடுத்த அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உத்தரவிட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சட்டத்தினை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் அவிநாசி ஒன்றிய நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT