திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்தை அபகரிப்பதாகக்கூறி பெண் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண் ஒருவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்லடம் வட்டம் ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மனைவி பத்மவாதி(40) என்பது தெரியவந்தது. இவருக்குச் சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றாகத் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணியை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT