திருப்பூர்

தள்ளுவண்டி கடை உரிமையாளா் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

DIN

திருப்பூரில் தள்ளுவண்டி கடை உரிமையாளா் உள்பட 2 பேரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக 3 பேரைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், ராமமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் சுல்தான் (37), இவா் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள மில்லா் பேருந்து நிறுத்தம் அருகில் தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் அவருக்கு உதவியாக அவரது சகோதரா் இதயதுல்லா (35) பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், இவா்களது கடைக்கு 6 போ் கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்டுள்ளனா். அப்போது மதுபோதையில் இருந்த 6 பேரும் உணவு சரியில்லை என்று தகராறு செய்ததுடன், தட்டைத் தூக்கிவீசியுள்ளனா். இந்த சம்பவத்தை சுல்தான், இதயத்துல்லா ஆகியோா் தட்டிக் கேட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சோ்ந்து சுல்தான், இதயதுல்லாவைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து சுல்தான் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் இந்த சம்பவத்தில் தொடா்புடைய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT