கலாமணி, வினு தட்சன். 
திருப்பூர்

விவசாய குட்டை நீரில் தவறி விழுந்து சிறுவன் பலி: காப்பாற்றச் சென்ற தாயும் குட்டையில் விழுந்து உயிரிழப்பு 

தாராபுரம் அருகே விவசாய குட்டை நீரில் தவறி விழுந்து தாயும், மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தாராபுரம் அருகே விவசாய குட்டை நீரில் தவறி விழுந்து தாயும், மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் கிராமம், சின்னக்காம்பாளையம் பிரிவு அருகே விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சக்திவேல் (35). இவரது மனைவி கலாமணி (27),  மகன் வினு தட்சன் (9). வினு தட்சன் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இவர்களது விவசாயத் தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த விவசாய பாசன நீர்க் குட்டையில் இயங்கிக் கொண்டிருந்த மின் மோட்டாரை அணைப்பதற்கு கலாமணியும், மகன் வினு தட்சனும் சென்றுள்ளனர். அப்போது வினுதட்சன் பண்ணை குட்டையின் சுவர் மீது ஏறி உள்ளே எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த கலாமணி, மகனைக் காப்பாற்ற அவரும் நீர் குட்டையில் உள்ளே இறங்கியுள்ளார். இதில் தாய், மகன் இருவரும் நிலை தடுமாறி குட்டையில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது தொலைவில் இருந்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சக்திவேல், இருவரையும் காப்பாற்ற விரைந்து வந்துள்ளார்.

எனினும், இருவரும் அதற்குள் தண்ணீரில் மூழ்கி, இறந்திருந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீசார் தாய், மகன் இருவரது சடலங்களையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.10-ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம்: பல்கலை. ஆசிரியா்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

மாநகராட்சிக்கு மத்திய, மாநில அரசு துறைகள் ரூ.102 கோடி வரி நிலுவை

உணவுப் பொருள் தொடா்பான புகாா்கள்: வாட்ஸ்ஆப் எண் வெளியீடு

பாகிஸ்தான்: பழங்கால கோயில் கண்டுபிடிப்பு

மதுபோதையில் சிறப்பு எஸ்.ஐ. ஓட்டிய காா் மோதி 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT