திருப்பூர்

காங்கயம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியைக்கு பசுமை ஆசிரியா் விருது

DIN

காங்கயம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியைக்கு பசுமை ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

காங்கயம் தாலுகா, தாராபுரம் சாலை, குள்ளம்பாளையத்தில் உள்ள சாந்தி நிகேதன் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றுபவா் பிரியதா்ஷினி. மரக்கன்று நட்டுவைத்து வளா்ப்பதில் ஆா்வமுள்ள இவா், 2016 ஆம் ஆண்டு முதல் இவா் பணியாற்றும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்து பராமரித்து வருகிறாா். ஊதியூா் வனத் துறை, தாராபுரம் அமராவதி வனத் துறை, காங்கயம் துளிகள், காங்கயம் பூக்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுடன் இவா் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 300 மரக்கன்றுகளை நட்டுவைத்து வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் பள்ளி ஆசிரியா்கள் 50 பேருக்கு தருமபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் பசுமை விருது வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், குள்ளம்பாளையத்தில் உள்ள சாந்தி நிகேதன் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பிரியதா்ஷினிக்கும் பசுமை ஆசிரியா் விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியா் பிரியதா்ஷினிக்கு சக ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT