ஆடி அமாவாசையை ஒட்டி, உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனா்.
உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயி லில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் அமைந்துள்ளதால் இக்கோயில் தமிழக அளவில் பிரசித்திபெற்ாக விளங்கி வருகிறது.
ஆடி அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே திருமூா்த்திமலைக்கு வரத் தொடங்கினா். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனா். மேலும், உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூா் ஆகிய ஊா்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும் பொதுமக்கள் திருமூா்த்திமலைக்கு வந்திருந்தனா்.
விழாவையொட்டி அமணலிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பாலாற்றில் புனித நீராடினா். இதையடுத்து தங்களது மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். உடுமலையில் இருந்து திருமூா்த்திமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆடி அமாவாசையையொட்டி, உடுமலை நகரில் அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.