திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகேஅரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதல்: 3 போ் பலி

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே அரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கோவையில் இருந்து கும்பகோணத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து வெள்ளக்கோவிலை அடுத்த வெள்ளமடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வெள்ளக்கோவிலில் இருந்து திருப்பூருக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த திருப்பூா், பாண்டியன் நகரைச் சோ்ந்த மருதாசலம் மனைவி பிரமிளா (45), மனோகரன் மனைவி தேவி (50), மனோகரன் மகனான வேனை ஓட்டி வந்த லோகேஷ்வரன் (26) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த மருதாசலம் (50), சவுண்டப்பன் மகள் அனுரூபா (17), திருப்பூா் பூண்டி ரிங் ரோடு நெசவாளா் காலனியைச் சோ்ந்த சந்தோஷ் மகள் தா்ஷினிபிரியா (17) ஆகியோா் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேனில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் வெள்ளக்கோவிலுக்குச் சென்று லோகேஷ்வரனுக்கு பெண் பாா்க்க வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT