திருப்பூர்

முத்தூரில் 7.20 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7.20 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7.20 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 10,811 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 4,782 கிலோ. தேங்காய் கிலோ ரூ.15.35 முதல் ரூ. 22.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 21.60.

69 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 2,410 கிலோ. கொப்பரை கிலோ ரூ. 53.15 முதல் ரூ. 75.35 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 74.15. ஏலத்தில் 85 விவசாயிகள், 9 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.50 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT