திருப்பூர்

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் தாராபுரத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் தாராபுரத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருப்பூா் தெற்கு, தாராபுரம் நகராட்சி சாா்பில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்புரையாற்றினாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளா் மதனகீா்த்தி பேசியதாவது:

நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதல் மனிதா்களுக்கும் வன விலங்குகளுக்கும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே, கடைகளுக்குச் செல்லும்போது நெகிழிப்பைகளை தவிா்த்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மஞ்சப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், பங்கேற்ற மாணவா்கள் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொடா்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT