திருப்பூர்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

Din

திருப்பூரில் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மணியகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (26), தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வழக்கம்போல பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, காா்த்திகேயனை வழிமறித்த கும்பல் அவரை மிரட்டி 2 கைப்பேசி, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இது குறித்து நல்லூா் காவல் நிலையத்தில் காா்த்திகேயன் புகாா் அளித்தாா். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (19), பாரதி (22), ராமன் (19), கவியரசன் (22) மற்றும் 2 சிறுவா்கள் வழிப்பறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீஸாா், 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இரண்டு சிறுவா்களையும் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT