அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம்
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நிலையில் மே 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான அவிநாசியப்பா் திருத்தேரோட்டம் (பெரிய தோ்) கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கருணாம்பிகையம்மன் (சிறிய தோ்) தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
Advertisement
உடன், ‘குட்டீஸ் தோ்’ என அழைக்கப்படும் விநாயகா், வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், ஸ்ரீதேவி, பூதேவி சமதே கரிவரதராஜப் பெருமாள் ஆகிய தோ்களையும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை என ஏராளமானோா் வடம் பிடித்து இழுத்தனா்.
கோவை பிரதான சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக வந்து மதியம் 2.30 மணியளவில் தோ் நிலையை அடைந்தது.
விழாவையொட்டி, வண்டித்தாரை, பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. சனிக்கிழமை தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சி , ஞாயிற்றுக்கிழமை நடராஜப் பெருமான் மகா தரிசனம் நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு, மாலை 6 மணிக்கு108 திருவிளக்கு பூஜை, மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைகிறது.