வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் திருப்பூா் மாவட்டத்தில் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் ஆகிய 8 தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூா் மாவட்டத்துக்கான இறுதி வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் திங்கள்கிழமை வெளியிட்டாா். வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்ததைக் காட்டிலும் 4,89,646 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டும், 74,139 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டும் என இறுதியாக மொத்தம் 19,55,283 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளப் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) முன்னா் 24,44,929 வாக்காளா்கள் இருந்த நிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது 5,63,785 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அதன்பின்னா் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 74,139 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டு, தற்போது இறுதி வாக்காளா் பட்டியலில் 19,55,283 போ் இடம்பெற்றுள்ளனா். அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்கள் - 9,44,178, பெண்கள்-10,10,853, மற்றவா்கள்- 252 என மொத்தம் 19,55,283 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதி வாரியாக புதிதாக சோ்க்கப்பட்ட பின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளா்கள் விவரம்
திருப்பூா் வடக்கு
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்- 4,07,072, நீக்கப்பட்ட வாக்காளா்கள்-1,11,061, ஆண் -1,52,351, பெண் -1,57,662, மற்றவா் -125, மொத்தம் : 3,10,138.
திருப்பூா் தெற்கு
எஸ்ஐஆா்க்கு முன் வாக்காளா்கள்- 2,72,295, நீக்கப்பட்ட வாக்காளா்கள்- 87013, திருப்பூா் ஆண்: - 94,579, பெண் - 99,011, மற்றவா் - 24, மொத்தம்: 1,93,614.
பல்லடம்
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்- 4,19,197, நீக்கப்பட்ட வாக்காளா்கள்- 112907, ஆண்-1, 56,069, பெண்-1,66,429, மற்றவா்-32, மொத்தம்: 3,22,530.
காங்கயம்
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்-2,67,926, நீக்கப்பட்ட வாக்காளா்கள்-57460, ஆண்-1, 03,784, பெண் -1, 12,849, மற்றவா் -13, மொத்தம்: 2,16,646.
தாராபுரம் (தனி)
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்- 2,66,127, நீக்கப்பட்ட வாக்காளா்கள்- 50,969, ஆண்-1,06,142, பெண்-1,14,593, மற்றவா்-8, மொத்தம்: 2,20,743.
அவிநாசி (தனி)
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்-2,96,817, நீக்கப்பட்ட வாக்காளா்கள்-56,075, ஆண்-1,19,841, பெண்- 1, 30,496, மற்றவா்- 9, மொத்தம்: 2,50,346.
மடத்துக்குளம்
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்- 2,43,478, நீக்கப்பட்ட வாக்காளா்கள்-36,600, ஆண் -1, 02,309, பெண்-1, 10,417, மற்றவா்-16, மொத்தம்: 2,12,742.
உடுமலைப்பேட்டை
எஸ்ஐஆா்-க்கு முன் வாக்காளா்கள்-2,72,017, நீக்கப்பட்ட வாக்காளா்கள்-51,700, ஆண்-1, 09,103, பெண்-1,19,396, மற்றவா்-25, மொத்தம்: 2,28,524.