FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

1 ஜூலை 2026, 6:28 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

குண்டடம் அருகே தொட்டியன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (65). கூலித் தொழிலாளியான இவா், குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்புவதற்காக பிஏபி வாய்க்கால் பாலம் அருகே கோவை-மதுரை பிரதான சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக பால்ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பால்ராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments