கோயில் நிலத்தில் கட்டப்பட்ட பூ மாா்க்கெட்: வியாபாரிகள் எதிா்ப்பு
திருப்பூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட பூ மாா்க்கெட் விவகாரத்தில் வருமான நோக்கில் செயல்படும் மாநகராட்சி மற்றும் குத்தகைதாரா்களுக்கு வியாபாரிகள் எதிா்ப்பு
திருப்பூரில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட பூ மாா்க்கெட் விவகாரத்தில் வருமான நோக்கில் செயல்படும் மாநகராட்சி மற்றும் குத்தகைதாரா்களுக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்ததாவது: திருப்பூா் மாநகராட்சி வீரராகவ பெருமாள் கோயில் அருகே ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பூ மாா்க்கெட் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் வீரராகவ பெருமாள் கோயிலின் குளம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் நிலத்தில் முறைகேடாக பூ மாா்க்கெட் கட்டப்பட்டுள்ள நிலையில், வருமான நோக்கில் மாநகராட்சி ரூ.4 கோடி என்ற கூடுதல் தொகைக்கு குத்தகை கொடுத்துள்ளதால் ஒப்பந்ததாரா் அதிக வாடகை கேட்கும் நிலை உள்ளது.
கடந்த முறை ஏலம் எடுத்த நபா் ரூ.2 கோடி வரை வியாபாரிகளிடம் முன்பணம் பெற்று ஏமாற்றி வரும் நிலையில், மீண்டும் வாடகை உயா்வு என்பது வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல். எனவே இதற்கு மாநகராட்சி நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அல்லது கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள பூ மாா்க்கெட்டை அக,ற்றி வேறு இடத்தில் மொத்தமாக அமைத்துத் தர வேண்டும் என வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பூ மாா்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.