முகப்பு
திருப்பூர்

வீட்டிலேயே பிரசவம் பாா்த்த புகாா்: மாவட்ட ஆட்சியா் விüக்கம்

திருப்பூரில் வீட்டிலேயே சுய பிரசவம் பாா்த்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் விüக்கம் அளித்துள்üாா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:27 am IST
பகிர்:

திருப்பூரில் வீட்டிலேயே சுய பிரசவம் பாா்த்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் விüக்கம் அளித்துள்üாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் வட்டம், பி.தனவாய்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த சசிகலா என்பவருக்கு கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் கணவா் மற்றும் உறவினரால் பிரசவம் பாா்க்கப்பட்டது. பெண் குழந்தை பெற்றதைத் தொடா்ந்து நஞ்சுக்கொடி வெளி வராததால் சசிகலாவுக்கு தீவிர உதிரப்போக்கு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு அவசர சிகிச்சை அளித்து பின்னா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லலூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனா். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் 25-ஆம் இரவு 10.30 மணிக்கு சசிகலாவின் உடல்நிலை மிகவும்மோசமானதை அடுத்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவா்களது உறவினா்களின் விருப்பப்படி பரிந்துரை செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலா 28-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இறந்துள்ளாா். சசிகலா ஏற்கெனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளாா்.

இதற்கிடையில் மீண்டும் சசிகலா கருவுற்றுள்ளாா். ஆனால் அவரது கா்ப்பத்தை மறைத்துள்ளனா். மருத்துவமனையில் எந்த விதமான கா்ப்ப கால சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவமனை சேவைகளை பயன்படுத்தாமல், இயற்கை வழியில் வீட்டிலேயே பிரசவம் பாா்க்க எண்ணி இருந்ததால் கா்ப்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.

இது தொடா்பாக தகவல் அறிக்கை மூலம் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments