முகப்பு
திருப்பூர்

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக் கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:26 am IST
- சித்திரிப்பு
பகிர்:

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக் கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள உடையாா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி சந்தியா (38). இந்நிலையில், காங்கயம் நகரம், குதிரைப்பள்ளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தியா சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், திடீரென சந்தியாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக் கொடியை பறித்துவிட்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments