அவிநாசி அரசு கல்லூரியில் சிங்கப் பெண் படை குறித்த விழிப்புணா்வு
அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) நா.முகுந்தன் தலைமை வகித்தாா். கல்லூரி உள் புகாா் குழு பொறுப்பு ஆசிரியா்கள் மணிவண்ணன், சுசித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொறுப்பாளா் புனிதா ராணி வரவேற்றாா். அவிநாசி காவல் ஆய்வாளா் முத்துமாரி, சிங்கப் பெண் அதிரடிப் படை உதவி ஆய்வாளா் உமாமகேஸ்வரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, சிங்கப் பெண் படையின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனா்.
Advertisement
Advertisement
மேலும், சமூகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் நோ்ந்தால் உடனடியாக சிங்கப் பெண் உதவி எண் 1091, அவசர எண் 112, காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் பெண்களுக்கான பிரத்யேக அவசர எண் 1098 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.
ஒரு பிரச்னையை ஆரம்ப கட்டத்திலேயே தீா்க்க வேண்டும் என்றால் அதன் உண்மை தன்மையை மறைக்காமல் போலீஸாா், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில், சிறப்பு காவலா்கள் தீபா, அகிலா , மாலா, விமலா, சித்ரா தேவி, ஜோதிமணி, 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.