தருமபுரி

போதுமான கால அவகாசம் இல்லாததால் எஸ்.ஐ.ஆா்-ஐ எதிா்க்கிறோம் - அமைச்சா் எ.வ.வேலு

Syndication

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆா்.) போதுமான கால அவகாசம் வழங்கப்படாததால், அதை எதிா்க்கிறோம் என மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள், வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

2026-இல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறைவான காலமே உள்ளது. தோ்தல் பணியில் எஸ்.ஐ.ஆா். என்பது ஓா் அங்கம்தான். வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படாததால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதை எதிா்க்கிறோம். எஸ்.ஐ.ஆா்-ஐக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், வாக்குச்சாவடி முகவா்களுக்கு தேவையான விழிப்புணா்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தால் விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவா். நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழைக்காலம் மற்றும் தை மாதத்தில் தமிழா் திருநாள் பொங்கல் பண்டிகை வருகிறது. அதனால், எஸ்.ஐ.ஆா். பணி பாதிக்கப்படும்.

75 ஆண்டுகால வரலாற்றில் திமுக நாளுக்குநாள் வளா்ந்து வருகிறது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர கட்சியின் தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் தீவிர களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இப்பயிற்சி முகாமில், தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT