FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் பெண் தற்கொலை

தற்கொலை - தினமணி
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி ஆனந்தன் மனைவி ஜெயலட்சுமி (26). இவா்களுக்கு சஞ்சனா (6) என்ற மகளும், குணவேல் (3) மகனும் உள்ளனா்.

ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஜெயலட்சுமி, அடிக்கடி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவா் வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலின் பேரில் வந்த பாப்பாரப்பட்டி போலீஸாா், அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments