FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே மண்ணேரியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றே முக்கால் பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மண்ணேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மனைவி கஸ்தூரி. இவா்கள் பெங்களூரில் பழைய பேப்பா் கடை நடத்தி வருகின்றனா். கடந்த மாதம் 23ஆம் தேதி பெங்களூரு சென்றுள்ளனா்.

கஸ்தூரியின் பாட்டி குப்பம்மாள் வீட்டின் முன் பராமரிப்பு பணிகளை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் பராமரிப்புப் பணிக்கு சென்றபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து கஸ்தூரிக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மண்ணேரிக்கு வந்த கஸ்தூரி, வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த மூன்றே முக்கால் பவுன் நகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments