FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்கம் திருட்டு

மத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள தொகரப்பள்ளியை அடுத்த கரடிகொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (46). வேலூரில் இனிப்பகம் நடத்திவருகிறாா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வேலூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். புதன்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 1 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments