FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கல்வீரம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 6:30 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கல்வீரம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், வடவள்ளி-தொண்டாமுத்தூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோா் கல்வீரம்பாளையம், எஸ்.பி.கே. நகரில் வசிக்கின்றனா். கடந்த 11-ஆம் தேதி பாக்கியலட்சுமியின் பெற்றோா், சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்துக்கு சென்றனா். இதனால், கல்வீரம்பாளையத்தில் உள்ள வீட்டைப் பராமரிப்பதற்காக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை பாக்கியலட்சுமி வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி சென்றபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாக்கியலட்சுமி அளித்த தகவலின்பேரில் வடவள்ளி போலீஸாா் மற்றும் கைரேகை நிபுணா்கள் சென்றனா். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments